2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

கல்லுடைக்கும் தொழிற்சாலையால் பாதிப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ்ப்பாணம், ஈவினை கிழக்கிலுள்ள கல்லுடைக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசுப் படலம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன.

மேற்படி இடத்தில் இயங்கி வரும் கல்லுடைக்கும் தொழிற்சாலைக்குத் தேவையான கற்கள், அருகாமையிலுள்ள காணியில் குவிக்கப்பட்டு, பாரிய அரிதட்டுக்கள் மூலம் அரிக்கப்பட்டு, அதன் பின்னர் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 

நேரக்கட்டுப்பாடின்றி அரிதட்டில் போட்டு கற்களை அரிப்பதால், அதிலிருந்து வெளியேறும் தூசுப் படலம், விவசாய நிலங்களில் படிவதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு தெரியப்படுத்திய போதும், இதுவரையில் மாற்று ஒழுங்குகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .