2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

காணி அமைச்சின் அனுமதியையும் மீறிய பிக்கு

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முல்லைத்தீவு, கொக்கிளாயில் அமைக்கப்படும் விகாரையின் கட்டடப் பணியை நிறுத்துமாறு கொழும்பிலிருந்து வருகை தந்த காணி அமைச்சின் அதிகாரிகள் தடையுத்தரவு பிறப்பித்தும் அதனையும் மீறிய வகையில் பிக்கு ஒருவர் விகாரையைத் தொடர்ந்து கட்டிவருகின்றார் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்படுவதற்கு பொதுமக்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக கொழும்பிலிருந்து வருகை தந்த காணி அமைச்சின் அதிகாரிகளால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிக்குவிடம் எழுத்துமூலமாக நேரடியாக வழங்கப்பட்டது.

எனினும், அதனையும் மீறி பிக்கு விகாரையைத் தொடர்ந்து கட்டி வருகின்றார். அதனைத் தடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பலரிடம் கோரிக்கைகள் விடுத்தும் நிறுத்தப்படவில்லை.

மக்களுடைய காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கக்கூடாது. ,து எங்களுடைய பொதுவான விடயமாகவுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .