2021 மே 06, வியாழக்கிழமை

காண்டவதகனம், நெட்டை மரங்கள் அரங்க நிகழ்வுகள்

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மௌனகுருவின் காண்டவதகனம் மற்றும் கே.பாலேந்திராவின் நெறியாள்கையில் நெட்டை மரங்கள் எனும் அரங்க நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்றன.

யாழ். பல்கலைகழகத்தில் திங்கட்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சி.மௌனகுருவுடன் ஒரு கலைஞருடனான சந்திப்பு எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக மொழிபெயர்ப்பு கற்கை மாணவர்கள் கலந்துரையாடினார்கள்.

அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் மௌனகுருவின் காண்டவதகனம் மற்றும் கே.பாலேந்திராவின் நெறியாள்கையில் நெட்டை மரங்கள் எனும் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .