2021 மே 10, திங்கட்கிழமை

குறைநிவர்த்தி நடமாடும் சேவை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வடமாகாண சபையும் மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் குறைநிவர்த்தி நடமாடும் சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டு, மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வு வழங்கவுள்ளனர்.

இதில் தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள், கலந்துகொள்ள முடியும் என பிரதேச செயலாளர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X