2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சங்குப்பிட்டி பாலம் சுற்றுலாத்தளமாக மாற்றம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் இரண்டாவது தரைவழிப் பாதையாகக் காணப்படும் ஏ - 32 வீதியில் (யாழ்ப்பாணம் - மன்னார்) அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலம், தற்போது சுற்றுலாத் தளமாக முன்னேற்றமடைந்து வருகின்றது.

முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் 1,037 மில்லியன் ரூபாய் செலவில் 288 மீற்றர் நீளம் கொண்டதாக இந்தப் பாலம் கடந்த 2011ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

7.35 மீற்றர் அகலம் கொண்ட இந்தப் பாலம், இருவழிப் பாதையைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த பாலம் அமைக்கப்பட்ட பின்னர், யாழ்;ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான குறைவடைந்தது.

இந்தப் பாலத்திலிருந்து கடற்பகுதியை பார்வையிடும் போது, அது இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அனைவரும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால், இந்தப் பாலத்தை சுற்றுலாத் தளமாக மாற்றும் முயற்சியை வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை மேற்கொண்டன.

முதற்கட்டமாக பாலத்தின் இருமருங்கில் சூரிய கலத்துடன் கூடிய மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன. பாலத்துக்கு மட்டுமல்ல பாலத்தை அண்டிய 2 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பாலத்தை அண்டிய கடலில் மண் கொட்டப்பட்டு, அவற்றில் கல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் இந்தப் பாலம் பார்ப்பவர்களை பிரமிப்பூட்டும் வகையில் காணப்படுகின்றது.

இதனால், பாலத்துக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிகளவான பயணிகள் பாலத்துக்கு மாலை வேளைகளில் சென்று தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X