2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழப்பு

Gavitha   / 2016 மார்ச் 27 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மீசாலை சங்கரத்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை கடக்கும்  போது விபத்துக்குள்ளான இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த துரைசிங்கம் ஐங்கரன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15ஆம் திகதி இரவு மீசாலை சங்கரத்தை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, ரயிலில் மோதி அவர் படுகாயங்களுக்குள்ளானார்.

இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X