2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நிலாவரையில் தீ வைத்து எரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்

சுன்னாகம் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, நிலாவரை - ஈவினை பகுதியில் வைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிலையில், இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.  

கொளுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு, அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது.  

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கலாம் என்று, அச்சுவேலி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனமை குறித்து, மோட்டார் சைக்கிள் உரிமையாளரால், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--