2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தொலைபேசியில் கதைத்த அண்ணா எங்கே

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, கடைக்கு சென்ற அண்ணா காணாமல் போயிருந்தார். நாங்கள் அவரை பல இடங்களில் தேடியும் இல்லை. இதன் பின்னர் ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் பம்பைமடுவில் இராணுவமுகமில் இருப்பதாக தொலைபேசியில் கதைத்தார்' என சகோதரி ஒருவர் சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வின் 3ஆம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் மக்ஸ்வல் பரணகம தலைமையில் இடம்பெற்றது.

தனது அண்ணா ஐந்து வருடங்களின் பின்னர் 2014ஆம் ஆண்டு தொலைபேசியில் கதைத்ததாக கூறி அவரை கண்டுபிடித்து தருமாறு அந்த சகோதரி கோரிக்கை விடுத்தார்.

கதைக்கும் போது, தான் பம்பை மடுவில் இரானுவ பாதுகாப்பில் உள்ளதாகவும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஐந்து வருடங்களின் பின்னர் கதைத்த அவரை சென்று பார்க்கவில்லையா என கேட்டதற்கு, அந்த இடம் தொடர்பாக கேட்டதற்கு அது ஒரு காட்டுப்பிரதேசம் அங்கு செல்லமுடியாது என அவருடனிருந்து தடுப்புக்கு சென்று விடுதலையாகி வந்தவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X