Niroshini / 2016 மார்ச் 21 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
யாழ். மாவட்டத்திலுள்ள 10 பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களில் இதுவரை காலமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போத்தலில் கள் அடைக்கும் தொழில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கள் தொழிலாளர்கள் மற்றும் பாவனையாளர்களின் நலன் கருதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த கள் போத்தலில் அடைக்கும் தொழில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பமாகும் பனம் கள் பருவத்தில்;, தொடர்ந்து வரும் மாதங்களில் அதிகளவான கள்ளை சேகரிப்பாளர்கள் பெறுகின்றனர்.
உடனடி நுகர்வைச் செய்யும் பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வது தவிர மிஞ்சிய கள்ளை பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், சேகரிப்பாளர்களிடமிருந்து பெற்று, போத்தலில் அடைத்து, கள் பருவம் இல்லாத மாதங்களில் விற்பனை செய்வது வழமை.
இந் நிலையில், கள் போத்தலில் அடைப்பதற்கான வரி அதிகரிக்கப்பட்டமையால் ஏற்பட்ட நட்டம் காரணமாக போத்தலில் கள் அடைக்கும் தொழிலை பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுத்தி வைத்தன. இதனால், மேலதிக கள் நிலத்தில் ஊற்றப்படும் நிலையேற்பட்டது.
சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அதில் எவ்வித பயனும் கிட்டவில்லை.
இந்நிலையில், சேகரிப்பாளர்கள் மற்றும் பாவனையாளர்களின் நலன்கருதி நிறுத்தி வைக்கப்பட்ட போத்தலில் கள் அடைக்கும் தொழிலை சங்கங்கள் ஆரம்பித்துள்ளன.
19 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago