2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தி வெட்டு

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்கான சம்பவமொன்று, திங்கட்கிழமை (07) திக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரீ.வ.சிவன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கத்திக்குத்துக்கிலக்காகியுள்ளார்.

குடும்ப பிரச்சினை ஒன்றுடன் தொடர்புபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்யச் சென்ற போது, சந்தேகநபருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, தந்தை கத்தியால் மகனைக் வெட்ட ஓங்கியபோது, அதனைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தி வெட்டு வீழ்ந்துள்ளது.

இதையடுத்து, தந்தை அவ்விடத்தைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சந்தேகநபரான மகனை கைது செய்துள்ள பொலிஸார், தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயங்களுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--