2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மிருசுவில் படுகொலை விவகாரம்: உறவினர்களிடம் விசாரணை

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.றொசாந்த் எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம், ​வெள்ளை வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள், அச்சுறுத்தும் வகையில் விவரங்களைச் சேகரித்துச் சென்றுள்ளனர் என, யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்,  இன்று (20) மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே, பாதிக்கப்பட்டவர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிருசுவில் பகுதல், 2000ஆம் ஆண்டு, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் உள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட ஒருவரைத் தேடி, வெள்ளை வாகனமொன்றில் வந்த நால்வர், அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் அதேபோல, கடந்த 11ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், படுகொலை நடந்த இடம், குடும்பத்தில் இறந்தவர்கள் யார் போன்ற தகவல்களை விசாரித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்குப் பின்னரே, இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .