2021 ஜனவரி 23, சனிக்கிழமை

யாழில் ஜே.வி.பி.யின் துண்டுப்பிரசுரம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 15 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசாதாரண வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்' என்ற தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், இன்று வெள்ளிக்கிழமை (15), யாழ். நகரப் பகுதிகளில், மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) வநியோகிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, இந்தத் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார்.

'மஹிந்த அரசைப் போன்று மைத்திரி – விக்கிரமசிங்க கூட்டரசும், வற் சுமையை மக்கள் மீது திணிக்கிறது' எனக் குறிப்பிடப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரங்களில், 'மோசடி வற்', 'மக்களுக்கு வேண்டாம், மோசடிகாரர்களிடம் இருந்து பணத்தை அறவிடு', 'வயிற்றுப் பிழைப்புக்காக அறவிடும் வரியை உடனடியாக இரத்துச் செய்', 'அரசாங்கத்தின் வீண் விரயச் செலவுகளை நிறுத்து', 'மக்கள் மீது சுமத்தப்படும் வரியை உடனடியாக நீக்கு' போன்ற வாசகங்கள், குறித்த துண்டுபிரசுரத்தில் பொறிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .