Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - புங்கன்குளம் ரயில் நிலையத்தில், இன்று (13) நண்பகல் 1 மணியளவில், வயோதிபர் ஒருவர், ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடனேயே, குறித்த வயோதிபர் மோதுண்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வயோதிபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026