2021 மே 15, சனிக்கிழமை

ரௌவுடிக் கும்பலுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கொக்குவில் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன் கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட ரௌடிக் கும்பலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.

கொக்குவில் சந்திப்பகுதியில் திங்கட்கிழமை (28) பிற்பகல், அடுத்தடுத்து வேகமாக சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை, வீதிப் போக்குவரத்தில் ஈடுபட்ட பொலிஸார் மறித்துச் சோதனை செய்தனர். இதன்போது, 3 மோட்;டார் சைக்கிள்களுக்கும் எவ்வித ஆவணங்களும் இருக்கவில்லை.

இதனையடுத்து, அந்தக் கும்பலிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்களிடமிருந்து வாள்கள், பொல்லுகள், கம்பிகள் என்பன மீட்கப்பட்டன. இதனையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் குழுவினர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர், நீதவானின் வாசஸ்தலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்த ஐவரில் ஒருவர், நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .