2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாகாண பாடசாலைகள் நாளை நடைபெறும்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 16 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள், நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை அதிபர் தெரிவுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளதால் நாளை பதில் பாடசாலையை நடத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியிருந்தது. இதனால் பாடசாலை நடைபெறுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இக்குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், அதிபர் பரீட்சைகள் நடைபெறும் பாடசாலைகள் தவிர்ந்த மிகுதி அனைத்துப் பாடசாலைகளும் நாளை பதில் பாடசாலைக்காக திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .