Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 29 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சிறுப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வெள்ளிக்கிழமை (27), வீடொன்றை உடைத்து 1 பவுண் நகை, இலத்திரனியல் பொருள் மற்றும் 3,500 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிய அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனை சனிக்கிழமை (28) கைது செய்துள்ளதாக அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இளைஞனிடம் இருந்து திருடிய பொருட்களை மீட்டதுடன், விற்பனை செய்த நகையையும் மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீட்டில் உள்ள அனைவரும் கோயிலுக்கு சென்ற நேரம் பார்த்து, பின்பக்க கதவை உடைத்து, உள் நுழைந்த குறித்த இளைஞன், பொருட்களை திருடி சென்றுள்ளார்.
இது தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்தனர்.
குறித்த இளைஞன் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, நீதிமன்றினால் விடுதலையானவர் என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago