2020 நவம்பர் 25, புதன்கிழமை

வீதி பெயர் மாற்றத்துக்கு மாநகர சபை அனுமதி வழங்கியதா?

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சேர்.பொன் இராமநாதன் வீதியை நாச்சிமார் கோவில் வீதி என மாற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை அனுமதி வழங்கியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கே.கே.எஸ். வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும், இவ்வீதியானது, சேர்.பொன் இராமநாதன் வீதி என்ற அழைக்கப்படுகின்றது.

இந்நிலையில்,  அண்மையில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று வீதிகளுக்கான பெயர்ப் பலகைகளை நாட்டியுள்ளது. அதில் சேர்.பொன் இராமநாதன் வீதி என்பதற்கு பதிலாக 'நாச்சிமார் கோவில் வீதி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பெயர்ப் பலகைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை அனுமதி வழங்கி, தமது இலட்சினையும் அதில் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .