2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வெயிலில் காய்ந்த நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மூதாட்டி ஒருவர் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து, இரண்டு நாட்களாக வெயிலில் காய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவமொன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து தெய்வநாயகி (வயது 73) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்; தெரிவித்தனர்.

கண் பார்வை அற்ற நிலையில் தனிமையில் வசித்து வந்த குறித்த மூதாட்டியை, உறவினர்; ஒருவர் வந்து பார்வையிட்டு செல்வது வழமை.

இந்நிலையில், வழமைப்போல் உறவினர் திங்கட்கிழமை (21) வந்து பார்;த்த போது குறித்த மூதாட்டி முற்றத்தில் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் வெயிலில் காய்ந்த நிலையில் காணப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார்; சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மரண விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .