Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
தென்மராட்சிப் பிரதேசத்தில் மீள்குடியேறிய குடும்பங்களில் தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் இன்று செவ்வாய்க்கிழமை இந்த உதவிகளை வழங்கியுள்ளது.
தையல் இயந்திரங்கள், ஆடுகள், கோழிக் குஞ்சுகள் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் (உதயன்) இவற்றை பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார்.
இதேவேளை, சேவாலங்கா நிறுவனம், மீள்குடியேறிய குடும்பங்களுக்கு சுகாதாரப் பொருள்களை வழங்கிவருகின்றது. இன்று கோயிற்குடியிருப்பு, சங்கத்தானை, சாவகச்சேரி நகரப்பகுதி ஆகியவற்றில் குடியேறியுள்ள மக்களுக்கு இவற்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago