Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
தொழிற்துறை அமைச்சின் செயற்பாடுகளை 30 வருடங்களுக்குப் பின்னர் இங்கு மேற்கொள்வதற்கு நாம் இங்கு வந்துள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் என்று தெரிவித்தார் தொழில்துறை அமைச்சர் காமினி லொகுகே.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள தொழில்துறை அமைச்சர் காமினி லொகுகே, பிரதி அமைச்சர் ஜெகத் பாலசூரிய, சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இதில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
எமது அமைச்சின் செயற்பாடுகளை மக்களுக்குச் மேற்கொள்வது குறித்த முதற்கட்டச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.
இதுவரை காலமும் தொடர்புகள் இல்லாத நிலையில் பெரும் நெருக்கடிகள் காணப்பட்டன. இந்நிலையை எமது ஜனாதிபதி தற்போது மாற்றியமைத்துள்ளார். நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள் என்ற எண்ணத்துடன் செயற்படுவோம்.
இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இழக்கப்பட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முன்னேற்றகரமாகச் செயற்படுவோம்.- என்றார்.
இதேவேளை நாவலர் வீதியில் தொழில் இல்லம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதுடன் பெண்கள் சுயதொழில் மேற்கொள்வதற்கும் வழிசமைத்துக் கொடுக்கப்படும்- என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago