Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை வீதிக்கும் குருசோ வீதிக்கும் இடைப்பட்ட கழிவு நீர் செல்லும் வாய்க்கால் உரிய முறையில் வெட்டப்படாமையால் இப்பகுதியில் வாழும் சுமார் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கோழும்புத்துறை வீதியில் இருந்து குருசோ வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் பொது மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியூடாக செல்லும் இந்த கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆழமாக்கப்பட்டது.
இதன் மூலம் கொழும்புத்துறை வீதிக்கும் குருசோ வீதியின் வடக்குப் புறமாக உள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் கழிவு நீர் தேங்கிக் காணப்படுகின்றது. இதேவேளை குருசோ வீதியூடாக கடற்கரைக்குச் செல்லும் தெற்குப்புற கழிவு நீர் வாய்க்கால் மணல் நிறைந்து நீர் செல்ல முடியாது தடைபட்டு காணப்படுகின்றது.
இதன் காரணமாக குருசோ வீதிக்கும் கொழும்புத் துறை வீதிக்கும் இடைப்பட்ட சுமார் நாநூறு மீற்றர் இடைப்பட்ட பகுதி கழிவு நீர் வாய்க்காலில் கழிவு நீர் தேங்குவதன் மூலம் நுளம்பு பெருகி காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசும் துர்ப்பாக்கிய நிலமையும் காணப்படுகின்றது .
இது சம்பந்தமாக பொது மக்கள் பல தடவைகள் யாழ் மாநகர சபையினருக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் தெரிவித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனவும் இதனால் டெங்கு நோய் பரவுமா என்ற பாரிய அச்சத்துடன் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

51 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
15 Apr 2026