2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யாழ்.மேல்நீதிமன்ற ஆணையாளராக நீதிவான் சு. பரமராஜா நியமனம்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

யாழ்.மேல்நீதிமன்ற ஆணையாளராகவும் யாழ். சிவில் மேல் முறையீட்டு நீதிமன்ற ஆணையாளராகவும் யாழ். மேல்நீதிமன்ற நீதிவான் சுப்பிரமணியம் பரமராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழு இவருக்கான இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிவானாகக் கடமையாற்றிவந்த இவரது சேவைக்காலம் முடிவுற்ற நிலையில் மேலும் ஒரு வருட காலத்துக்கு சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி நியமனமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--