Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 04 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு அமைப்பினால் (ஜய்கா) மேற்கொள்ளப்பட்ட குளங்களைப் புனரமைக்கும் பணிகள் பூர்த்தியானதை அடுத்து, ஏழு குளங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட இந்த ஏழு குளங்களின் வேலைகளும் இந்த வாரத்துடன் பூர்த்தியடைகின்றன. தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிலுள்ள நுணாவில், மட்டுவில், கச்சாய் ஆகிய இடங்களில் மூன்று குளங்களும் - கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் புத்தூர் பகுதியில் ஒரு குளமும் - சங்கானை பிரதேச செயலர் பிரிவில் சுழிபுரம் பகுதியில் ஒரு குளமும் - தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் இளவாலைப் பகுதியில் ஒரு குளமும் - வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குளமுமே புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள குளங்களாகும்.
15 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள இந்தக் குளங்களை எதிர்வரும் திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் பிரதேச மக்களிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago