2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

இணுவிலிலுள்ள சுப்பர் மார்க்கெட்டில் திருட்டு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 08 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

இணுவில் பகுதியிலுள்ள சுப்பர் மார்க்கெட்டில்  நேற்று அதிகாலை  திருட்டுச் சம்பவமொன்ற இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் மற்றும் பால்மா வகைகள் கிற்காட்டுகள் பிஸ்கட் வகைகள் என சுமார் ஜந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான  பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இணுவில் கந்தசுவமி ஆலய சந்தி காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட்டிலேயே  இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்றிரவு பெய்த மழையை சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .