2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட குளங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜய்கா எனும் ஜப்பானிய சர்வதேசக் கூட்டுறவு அமைப்பினால் புனரமைக்கப்பட்ட ஏழு குளங்கள் நேற்று திங்கட்கிழமை கமநல அபிவிருத்தித் திணைக்களங்களின் மூலம் பிரதேச கமக்காரர் அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டன.

பதினைந்து மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்தக் குளங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. ஜய்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் புனரமைப்புச் செய்த இந்தக் குளங்களை யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் கையளித்தனர். இதனையடுத்து, கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் இந்தக் குளங்களை பிரதேச கமக்காரர் அமைப்புக் குழுக்களிடம் கையளித்தார்.


யாழ் மாவட்டத்திலுள்ள நுணாவில், மட்டுவில், கச்சாய், வேலணை, இளவாலை, சுழிபுரம், புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள குளங்களே புனரமைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .