2025 ஜூலை 12, சனிக்கிழமை

தென்மராட்சியில் பரீட்சை மீட்டல் செயலமர்வுகள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை முன்னிட்டு யாழ். தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளின் மாணவர்களுக்கான துரித மீட்டல் செயலமர்வுகள் நடத்தப்படவுள்ளன.

இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள இந்தச் செயலமர்வுகளில் சங்கீதம், நடனம், சித்திரம் ஆகிய பாடங்களுக்கான மீட்டல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. கர்நாடக சங்கீதம் மற்றும் நடனப்  பாடங்களுக்கான செயலமர்வுகள் நாளைய தினம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளன.

சித்திரப் பாடத்திற்கான செயலமர்வு கொடிகாமம் கோட்ட மாணவர்களுக்காக 11ஆம் திகதி திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்திலும் சாவகச்சேரி கோட்ட மாணவர்களுக்காக எதிர்வரும் 16ஆம் திகதி இந்துக்கல்லூரியிலும் நடைபெறுமென வலயக் கல்விப் பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .