2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி பொதுமக்களின் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாகர் கோயிலூடான பருத்தித்துறை – மருதங்கேணி வீதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கப்படவுள்ளது.  

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால்,  பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மூடப்பட்டிருந்த இவ்வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

தற்போது சோரன்பற்று – மருதங்கேணி வீதியில் அமைந்துள்ள 6/1ஆம் இலக்கப் பாலத்தின் திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பொதுமக்களின் பாவனைக்காக இயக்கச்சி – புல்லாவெளி கட்டைக்காடு வீதியை தற்காலிகமாக பயன்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--