2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஏகாதிபத்தியத்தை மாற்ற நாம் ஒன்றுபட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாடுகளில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க யாழில் இன்று தெரிவித்துள்ளார்.

உலக வாலிபர் தினம் தொடர்பான நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி கருத்தினை அமைச்சர் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்காக இளைஞர், யுவதிகள் ஒன்றிணைகிறார்கள். இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் உருவான ஏகாதிபத்தியம் இன்றும் தொடர்கிறது. இதனை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

யாழ். பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு மாற்றுவதற்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டும். இதன்மூலம் வெளிநாட்டுக் கல்விகளை இப்பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த முடியும். இலங்கை மூவின இனத்தவர்களுக்கும் சொந்தமானது. சிங்களம், தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எங்கும் கல்விகளைக் கற்க முடியும் எனவும் அமைச்சர் எஸ்.பி. தெரிவித்ததுடன், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை பீடமாக தரம் உயர்த்தப்படும். எதிர்வருகின்ற வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு இரண்டு விடுதிகள் கட்டப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--