2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

நயினாதீவிலிருந்து கட்டுமரத்துடன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் தலைமன்னாரில் மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

நயினாதீவு கடற்கரைப் பகுதியில் கட்டுமரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டுமரத்தின் கயிறு அவிழ்ந்தால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனொருவன் இன்று திங்கட்கிழமை தலைமன்னார் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளான்.

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியைச் சேர்ந்த தம்பையா பவிகரன் (வயது-15) எனும் இச்சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு கடற்கரையில் கட்டுமரத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென கட்டுமரத்தின் கயிறு அவிழ்ந்தால் அவன் கட்டுமரத்துடன் கடலில் அடித்துச் செல்லப்பட்டான்.

அச்சிறுவன் இன்று பகல் தலைமன்னார் கடற்பரப்பில் கட்டுமரத்துடன் மிதந்து கொண்டிருந்தபோது தலைமன்னார் கடற்படையினர் மீட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பொலிஸார் அச்சிறுவனை  பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இது தொடர்பான  விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .