Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்தில் இதுவரை மின்சாரம் கிடைக்கப் பெறாத பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கொண்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சி.எச்.வீரசேகர, இலங்கை மின்சார சபை யாழ். மாவட்ட உத்தியோகத்தர் கே.குகதாஸ் ஆகியோருடன், இதுவரை மின்சாரம் கிடைக்கப்பெறாத பிரதேசங்களான சண்டிலிப்பாய் வடக்கு, பொக்காவளை, பெரியவிளான் பிள்ளையார் கோவிலடி, பெரிய விளான் அந்தோணியார் கோவிலடி, இளவாலை, உயரப்புலம், சண்டிலிப்பாய் தொட்டிலடி மடத்தடி, உரும்பிராய் சமாதியடி, நீர்வேலி, கரந்தன், அச்செழு பூலகிற்றி, சடையர்காடு இருபாலை, வி.எச். வீதி, செல்வபுரம், அராலி வடக்கு பெரிய தம்பிரான் போன்ற பிரதேசங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொண்டதோடு மட்டுமன்றி ஒருசில மாதங்களுக்குள் இப்பிரதேசங்களுக்கான மின்னிணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் கோரிக்கைக்கு இணங்க இப்பிரதேசங்களுக்கான மின்னிணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை தாம் ஒருசில மாதங்களுக்குள் மேற்கொண்டு மக்களுக்கான மின்னிணைப்பை வழங்குவதாக வடக்கின் வசந்த திட்டத்தின் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சி.எச்.விஜசேகர தெரிவித்தார்.
மேற்படி பிரதேசங்கள் இதுவரை மின்னிணைப்பை பெறாத பிரதேசங்கள் ஆகும். எனவேதான் இப்பிரதேசங்களுக்கு மின்னிணைப்பை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட சந்திரகுமாருக்கு இப்பிரதேச வாழ் மக்கள் தங்களுடைய மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்விற்கு ஈ.பி.டி.பி.யின். வலிகாம வலய இணைப்பாளர் ஜீவன், ஈ.பி.டி.பி.யின் மானிப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஜீவா, ஈ.பி.டி.பி.யின் கோப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஐங்கரன் மற்றும் பிரதேச மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
2 hours ago
2 hours ago