2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வட மக்களை யுத்த பாதிப்பிலிருந்து மீட்க இந்தியா தொடர்ந்தும் முயற்சி:கே.காந்தா

Menaka Mookandi   / 2011 ஜனவரி 21 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

வட மக்களை யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீட்பதற்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதன் பயனாகவே தற்போது வடக்கில் மக்கள் நிம்மிதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தனிகள் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.

தெற்கு மற்றும் வடக்கு வர்த்தகர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் முன்னாள் மாநகரசபை அமைவிடத்தில் நடைபெற்றது. இதனைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இந்திய நிதி உதவியில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வட பகுதியை மீளக் கட்டியெழுப்புவதற்கான பெரும் முயற்சிகளை இந்திய அரசு முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் வன்னி மக்களின் மீள் கட்டுமான பணிகளை முன்னெடுத்து வரும் இந்தியா என்றும் வன்னி மக்களோடு கை கோர்த்து நிற்கும்' என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த கண்காட்சி திறப்பு விழா நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், வடக்கு மற்றும் தெற்கு வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .