Super User / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களது பிரச்சினை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோரை பருத்தித்துறை, மாதகல் கடற்தொழிலாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, கடற்தொழிலாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்படைத் தளபதிக்கும், அரசாங்க அதிபருக்கும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
அதையடுத்து. தாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி ஹத்துரு சிங்க உறுதியளித்துள்ளார்.
9 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
1 hours ago