Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி தெல்லிப்பளைப் பொலிஸாரும் வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் இணைந்து பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் கலை நிகழ்வுகளையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
ஆண்கள், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி, மரதன் ஓட்டப் போட்டி, கயிறு இழுத்தல், பலம் பார்த்தல், கரப்பந்தாட்டப் போட்டி, தலையணிச்சண்டை, கீறிஸ்மரம் ஏறுதல், போர்த்தேங்காய் உடைத்தல் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் போட்டியாளர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துடனோ அல்லது தெல்லிப்பளை பிரதேச செயலக விளையாட்டு அலுவலருடனோ தொடர்புகொண்டு தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago
1 hours ago