2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

எழுவைதீவில் உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். எழுவைதீவுப் பகுதியில் பாலடைந்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் வயோதிபர் ஒருவரின்  சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம் வீசியதைத் தெடர்ந்து அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து,  மேற்படி சடலம் மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வயோதிபர் மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு  முன்னர் மரணமடைந்திருக்கலாமென தெரிவித்த பொலிஸார், சடலம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைவடைந்துள்ளதாகவும் கூறினர்.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் முகமாக இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X