Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுன்னாகம், கந்தரோடையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கந்தரோடையைச் சோந்த எஸ்.யோகேந்திரன் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
இவர் தூக்கில் தொங்குவதற்கு முதல் நாளான திங்கட்கிழமை தனது மனைவியுடன் சண்டையிட்டு மனைவியை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாகவும் இதனைத் தொடர்ந்து மனைவி உறவினர் வீட்டில் இரவு வேளையில் தங்கியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அவரது மனைவி, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்டுள்ளார்.
பின்னர் கிராம அலுவலகர் மூலமாக இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், மல்லாகம் மாவட்ட நீதிபதி நேரில்ச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியாசலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago