2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

'தீர்வு கிடைக்கும் வரைக்கும் யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய போராட்டம் தொடரும்'

Super User   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தீர்வு கிடைக்கும் வரைக்கும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்தது.

தமிழர்களின் கருத்துக்களை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

மாணவர்கள் மீதான தாக்குதல்களை சம்மந்தப்பட்டவர்கள் நிறுத்த வேண்டும். எங்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எமது மாணவ பேரவை தலைவர் சுப்பரமணியம் தவபாலசிங்கம் தாக்கப்பட்டதற்கு இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் கூட எங்களை அழைத்து எந்த வித பேச்சும் நடத்தவில்லை. எங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டால் எமது போராட்டத்தை ஜனநாயக வழியில் வலுப்படுத்தி உயிரோட்டமான முறையில் மேற்கொள்வோம் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X