2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

யாழ். குடாநாட்டில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் யாழ். பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த மின்வெட்டு இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை அமுலிலிருக்குமெனவும் சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மின்வெட்டு இடம்பெறவும் அவ்வலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தவேலைகள் காரணமாகவே இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சாரசபையின் யாழ். பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ். குடாநாட்டில் எதி;ர்வரும் 22ஆம் 23ஆம்  24ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--