2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு; பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 21 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது. இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த க.எடின்பரே என்ற மாணவன் நேற்றைய தினம் டெங்கு நோயின் தாக்கம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காரணமாக யாழில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எச்சரித்துள்ளது. யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. அதிகரித்து காய்ச்சலில் பீடிக்கப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் செல்லாது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்து சிகிச்சை பெறுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .