2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

மடுல்சீமையில் வீதி தாழிறங்கியது

Editorial   / 2026 ஜனவரி 10 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறையிலிருந்து மடுல்சீமைக்கு செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள வீதி தாழிறக்கம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.

குறித்த இடத்தில் பேருந்துகள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் பயணிக்கின்ற பொது போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் நடை பயணமாக சென்று பேருந்துகளில் மாறி செல்லக்கூடிய நிலைமை காணப்படுகிறது.

குறித்த வீதியில் மடுல்சீமை - பிட்டமாறுவ வீதியில் குருவிகல சந்திக்கு அருகில் மண்மேடு, கற்பாறைகள் சரிந்து விழும் அபாய நிலை காரணமாகவும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .