2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

பாரிய மின்கம்பத்தில் மோதிய அம்புலன்ஸ்: சாரதி நடத்துனர் படுகாயம்

Editorial   / 2026 ஜனவரி 10 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய மின்கம்பம் ஒன்றுடன் அம்புலன்ஸ் வண்டி மோதியதில் மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியதுடன் அம்புலன்ஸ் வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

சாரதி மற்றும் நடத்துனர் படுகாயம் அடைந்தத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த அம்புலன்ஸ் வண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாரியளவிலான மின்கம்பத்தில் மோதி உள்ளதுடன் அருகில் இருந்த பனைமரத்திலும் மோதியுள்ளது.

இதனால் குறித்த பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது சுகாதார அமைச்சின் சுகாதாரத் திணைக்களத்துக்கு கீழுள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு சொந்தமான நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குரிய அம்புலன்ஸ் வண்டி இதுவாகும். சுமார் ஒரு கோடி 75 லட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த அம்புலன்ஸ் வண்டி விபத்து திண்ணமாக மூற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .