2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

யாழ்.இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                        (சுமித்தி)
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையில் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் மாதாந்த சம்பளம் மாதாந்தம் வழங்கப்படாமையை கண்டித்து கடந்த 23 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவிருந்த வேளை இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் எஸ்.அஸ்ஹர் சம்பளம் மாதாந்தம் தவறாது வழங்கப்படுமென தெரிவித்ததை தொடர்ந்து அம்முடிவு கைவிடப்பட்டது.

ஆனால் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்று வரை வழங்கவில்லை. ஒரு ஊழியருக்கு சுமார் 30,000 முதல் 40,000 ரூபா வரை சம்பளம் வழங்கப்படவேண்டிய நிலையில் சம்பளத்தினை வழங்காது விட்டமையினால் தாமும் தமது குடும்பமும் பெரும் சிரமப்படுதாக தெரிவித்த ஊழியர்கள் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளனர்.

இவ்விடயம் குறித்து பருத்தித்துறை சாலை தொழிற்சங்க தலைவர் வரதராஜா தெரிவிக்கையில்,

கடந்த மாதம் மானியமாக 10,000 ரூபா வழங்கியுள்ளார். கடந்த மாதத்திற்கான சம்பளம் 12 ஆம் திகதி வழங்குவதாக முகாமையாளர் தெரிவித்தார். ஆனாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட தமது சம்பளத்தினை வழங்கவில்லை. அதேவேளை, சில நாட்களின் முன்பு சம்பளம் எப்போது கிடைக்கும் என  ஊழியர்கள் இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மாத சம்பளம் 12 ஆம் திகதி தருவதாக முகாமையாளர் பதிலளித்தார். உறுதிமொழி வழங்கப்பட்டதன்படி சம்பளம் வழங்காததை அடுத்தே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் குதித்துள்ளனர்.

தமது சம்பள பணம் குறித்து சரியான தீர்வு கிடைக்காத விடத்து பகிஷ்கரிப்பு தொடரும் என்று தொழிற்சங்க தலைவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .