2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

வெடிபொருள் வெடித்தமையால் இளைஞர் படுகாயம்

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

சாவகச்சேரி சரசாலை பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதானா வைத்திசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றிக்கிழமை காலை 9.30 மணிக்கு சாவகச்சேரி  சரசாலை பகுதியில் நடைபெற்றுள்ளது.

தோட்டத்தில் வேலை செய்துவிட்டு அதில் உள்ள குப்பைகளை கொழுத்திய போது அதில் இருந்த வெடிக்காத வெடிபொருள் ஒன்று வெடித்துள்ளது. இதனாலேயே குறித்த நபர் காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் சாரசாலை மேற்கை சேர்ந்த கந்தசாமி எழில்கரன் என்ற 21 வயதான இளைஞரே படுகாயமடைந்தவராவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .