2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

யாழ். வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். போதனா வைத்தியசாலை காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணர் பி. திருமாறன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரிகளை இன்னும் பொலிஸார் கைதுசெய்யயாததை கண்டித்து நாளை ஒரு மணிநேர  பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய சங்கத் தலைவர் தெரிவித்தார்.

இதன்போது மருத்துவ சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சூத்திரதாரிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டுமென கோரி பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்;மானித்துள்ளதாகவும், நாளை காலை 8 மணிமுதல் 9 வரை கடமையில் இருந்து வெளிநடப்பு செய்யவுள்ளதாகவும், அவசர சிகிச்சை, புற்றுநோய்ப் பிரிவு, குழந்தை மருத்துவ பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவு ஆகியன வழமை போல் இயங்குமென்றும், தனியார் மருத்துவமனைகளிலும், தனியார் சிகிச்சை நிலையங்களிலும் எதுவித சிகிச்சைகளும் மேற்கொள்வதில்லை எனவும் வைத்தியர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வாறு வைத்தியர்கள் மீதான தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறையினை மோசமாக்குவதுடன், பொதுமக்களின் சிகிச்சைகளையும் பாதிக்கும் வகையில் ஏற்படுகின்றதால், இவ்வாறான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடமபெறாதிப்பதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாரிடம் வைத்தியர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .