2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சட்டத்தரணி கைது

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வீதிப்போக்குவரத்தினை மீறிய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி ஒருவரை சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் அனுமதித்துள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி சட்டத்தரணி கையடக்கத் தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது, யாழ்.பொலிஸார் அவரை வழிமறிக்க மோட்டார் சைக்கிளை நிறுத்தாது அவர் பயணித்துள்ளார். பின்னர், பொலிஸார் அவரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சட்டத்தரணியை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 10 ஆயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, வழக்கினை மீள்பரிசீலணை செய்யுமாறு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ்.போக்குவரத்து பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X