2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் விடுவிப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத் ,சுமித்தி தங்கராசா

யாழ்.அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த தனியாருக்குச் சொந்தமான் வீடுகள் மற்றும் காணி என்பன இன்று வெள்ளிக்கிழமை  உத்தியோகபூர்வமான விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழ் அரியாலைப் பகுதியில் 512 ஆவது படைப்பிரின் பயன்பாட்டில் இருந்த 35 வீடுகள் மற்றும் ஆறு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2.00 மணிக்கு அரியாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இந்த வீடுகள் மற்றும் காணிகள் விடுவிப்பிப்பதற்கான உத்தியோக பூர்வ கடித்தினை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் கையளித்தார்.

1997 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த பகுதி வீடுகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. துற்போது வைத்தியசாலை வீதியில் 512 ஆவது படைப்பிரிவிற்கான நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 512 ஆவது படைப்பிரிவின் கீழ் இருந்து 90 வீதமான பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்க்பபட்டுள்ளது என்று அப்படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித் பல்லேகல தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய நிகழ்வில் பாhரம் பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில்கள் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திசிறி, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் ரூபின் கேதீஸ்வரன், மற்றும் பாதுகாப்பு படைகளின் தளபதிகள், இராணுவத்தினர்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
  Comments - 0

  • AJ Saturday, 03 August 2013 07:37 AM

    தேர்தல் நாடகம் ஆரம்பம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--