2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

Super User   / 2014 மார்ச் 24 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அதே இடத்தினைச் சேர்ந்த 19 வயது இளைஞனை ஞாயிற்றுக்கிழமை (23) கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினர் இன்று (24) தெரிவித்தனர்.

குறித்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி குறித்த இளைஞர் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 22 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த இளைஞனை தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .