2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தமிழ் மன்னர்களின் சிலைகளை அமைச்சர் பார்வை

Super User   / 2014 மார்ச் 27 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ நிறுவப்படவுள்ள சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டாம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திற்கு புதன்கிழமை (26) பார்வையிட்டார்.

இதன்போது, வடிவமைக்கப்பட்டு வரும் குறித்த மூன்று தமிழ் மன்னர்களது உருவச்சிலைகளை அமைச்சர் பார்வையிட்டதுடன், அதுதொடர்பில் சிற்பக்கலைஞர் சிவப்பிரகாசத்துடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

குறித்து மூன்று உருவச்சிலைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக மணிக்கூட்டுக் கோபுரத்தை சூழவுள்ள பிரதான வீதிகளை பார்க்கும் வகையில் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .