2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கீரிமலையில் யாத்திரிகர் மடமும் சிவபூமி கலைக்களஞ்சிய மண்டபமும் திறப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா


யாழ். கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட யாத்திரிகர் மடமும் சிவபூமி கலைக்களஞ்சிய மண்டபமும் ஞாயிற்றுக்கிழமை  (30) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சிவபூமி அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் இலங்கை இந்து மாமன்றம், வி.கைலாயபிள்ளை குடும்பத்தினர் மற்றும் ஏனைய அபிமானிகளின் நிதியுதவியின் மூலம் இதற்கான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன.

யாத்திரிகர்கள் தங்குவதற்கேற்ற வசதிகளுடன் யாத்திரிகர் மடம் உள்ளதுடன்,  யாழ்ப்பாணத்தின் கலை, கலாசாரங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் துர்க்கா மகளிர் இல்ல மாணவிகளின் ஓவியங்களும் கலைக்களஞ்சியப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மாவை ஆதீன கர்த்தா இரத்தினசபாபதிக் குருக்கள், நகுலேஸ்வர ஆதீன கார்த்தா இராஜ ஸ்ரீநகுலேஸ்வரக் குருக்கள், அமெரிக்காவிலுள்ள ஹாவாய் ஆதீன குரு முதல்வர் ரிஷப் தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் ஆசி உரையாற்றினர்.

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில்   கைலாயபிள்ளை மற்றும் அவரது மனைவி அபிராமி,   யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் வே.மகாலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், பிரதேச சபை தவிசாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .