2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சைக்கிள் ஓட்டப் போட்டியில் விபத்து; இராணுவ வீரர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பலாலி இராணுவ படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை  (30) காலை நடைபெற்ற சைக்கிள்  ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட இராணுவ வீரரின் சைக்கிளும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்குநேர் மோதியதால் படுகாயமடைந்த இராணுவ வீரர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். வேம்படிச் சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் பலாலி படைத் தலைமையகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.கலுவில (வயது 20) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் விரிவான விசாரணை விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

இச்சைக்கிள் ஓட்டப் போட்டியானது கட்டுவனிலிருந்து ஆரம்பமாகி பலாலி வீதி வழியாக யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கைச்; சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .