2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஆவரங்கால் விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். அச்சுவேலி, ஆவரங்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அச்சுவேலி போக்குவரத்துச் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் சைக்கிளும்  நேருக்குநேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

அச்சுவேலியைச் சேர்ந்த எஸ்.கந்தையா (வயது 72), கரவெட்டியைச் சேர்ந்த (வயது 47) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக  அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .